/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி
/
இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி
ADDED : அக் 19, 2024 06:37 AM

கோவை, ; கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ், 55. இவருக்கு சொந்தமான நிலம் மண்ணார்காடு பகுதியில் உள்ளது. அதை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், அபுபக்கர், 48, என்பவர் அப்துல் அஜீஸ் வீட்டுக்கு சென்று, தன்னை ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். கோவையில் உள்ள சிலர், அஜீஸ் நிலத்தை வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, அவர் அழைத்ததால், அஜீஸ் கோவை வந்தார். அபுபக்கர், அவரது நண்பர்கள் ஐந்து பேரை சந்தித்து பேசினார். அப்போது, அவர்களில் ஒருவரான ஜான் பீட்டர், தன்னிடம் சக்தி வாய்ந்த இரிடியம் இருப்பதாக தெரிவித்தார். அதை வாங்கி விற்றால், 10 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கும் எனவும், அஜீசுக்கு ஆசை காட்டினார்.
அப்போது, பானை ஒன்றை காட்டி, அதற்குள் அந்த சக்தி வாய்ந்த இரிடியம் இருப்பதாகவும், அதை அடிக்கடி திறந்து பார்த்தால், சக்தி போய்விடும் என்றும் கூறினர். இதையடுத்து, அபுபக்கர், ஜான் பீட்டர் ஆகியோரை சந்தித்து, 2 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் அஜீஸ். பணத்தை பெற்ற அவர்கள் இரிடியத்தை மட்டுமல்ல, அதை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்த அந்த பானையை கூட தரவில்லை. பணத்துடன் மாயமாகினர்.
இது குறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசில் அஜீஸ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய உடுமலையை சேர்ந்த அனில் குமார், 30, ஜோதிராஜ், 34, ஊட்டியை சேர்ந்த உத்தமன், 45 கோவையை சேர்ந்த சசிகுமார், 47 ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

