தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அன்னூரில் 2 நாள் கலை இரவு

 அன்னூரில் 2 நாள் கலை இரவு

 அன்னூரில் 2 நாள் கலை இரவு


ADDED : பிப் 13, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: ஜனநாயக வாலிபர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், அன்னூரில் கலை இரவு நடைபெறுகிறது.

இங்கு 15வது ஆண்டாக இந்த 2 நாள் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி மாலை புதுவை பூபாளம் கலைக்குழுவின், 'நையாண்டி தர்பார்', மதுரை நாராயணனின் மரக்கால் ஆட்டம், கோவை அனுஷா ஸ்ரீ குழுவின் பல்சுவை நடனம், சேலம் தமிழ் தர்ஷனா குழுவின் இரட்டை அம்மன் நடனம், சென்னை சம்பத் குழுவின் ரோலா போலா சாகசம் மற்றும் சாகுல் பிரேக்கர்ஸ் குழுவின் மேஜிக் ஷோ ஆகியவை நள்ளிரவு வரை நடக்கிறது.

அடுத்த நாள் மாலை திருவண்ணாமலை குழுவின் பெரிய மோளம், எடப்பால் குழுவின் களரி பைட் நடைபெறும். எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், 'வண்ணங்கள் வேறுபட்டாலும்,' என்ற தலைப்பில் பேசுகிறார். திருவாரூர் தமிழ்செல்வனின் காவடியாட்டம், மல்டி செல்வாவின் கருப்பராயர் நடனம் ஆகியவை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us