/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய குதிரை ஏற்றம் போட்டி: கோவை மாணவிக்கு 2 தங்கம்
/
தேசிய குதிரை ஏற்றம் போட்டி: கோவை மாணவிக்கு 2 தங்கம்
தேசிய குதிரை ஏற்றம் போட்டி: கோவை மாணவிக்கு 2 தங்கம்
தேசிய குதிரை ஏற்றம் போட்டி: கோவை மாணவிக்கு 2 தங்கம்
ADDED : ஜன 22, 2024 12:31 AM

கோவை;கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆராதனா, 12. கோவைப்புதுாரில் உள்ள தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் குதிரை ஏற்றம் போட்டியில் பல பதக்கங்களை குவித்து வருகிறார்.
இதுகுறித்து சிறுமி ஆராதனா கூறியதாவது:
எனக்கு சிறு வயதில் இருந்தே குதிரை என்றால் மிகவும் பிடிக்கும். அப்போது இருந்தே குதிரை ஏற்றம் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என எனக்கு ஆசை ஏற்பட்டது. இதுகுறித்து நான் எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் எனக்கு ஊக்கம் அளித்து பயிற்சி பெற அனுமதித்தனர்.
இதை தொடர்ந்து காளப்பட்டியில் உள்ள தனியார் குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று போட்டிகளுக்கு தயாராகி வருகிறேன்.
தினமும் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை பயிற்சியில் ஈடுபடுவேன்.
அதன் மூலம் தேசிய அளவில் நடைபெற்ற ஷோ ஜம்பிங் எனப்படும் தடைகளைத் தாண்டும் போட்டிகளில் கலந்த கொண்டு ஒரு தங்கம், இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று உள்ளேன்.
அதேபோல அக்முலேட்டர் எனப்படும் போட்டியில் ஒரு தங்கத்தை வாங்கி உள்ளேன். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளேன்.
குதிரைகளை உடனே திருப்புவது கடினம். ஆனால் நான் அதனை சுலபமாக செய்வேன். அதனை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
மேலும் எனது குதிரை டெமோ என்னுடன் அன்பாக பழகுவதால் போட்டிகளில் இருவரும் சேர்ந்து பதக்கங்களை வென்று வருகிறோம்.
குதிரையாக இருந்தாலும் என்னிடம் ஒரு நாய்குட்டி போல தான் இருக்கும்.
எனக்கு பயிற்சியை முழுமையாக கற்று கொள்ள இரண்டு வருடங்கள் ஆனது. எனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் பேரில், கோடை விடுமுறையில் ஐரோப்பாவில் ஒரு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவும், ஆண்டு முழுவதும் ஐரோப்பாவில் நடைபெறும் சில சர்வதேச கிளப் போட்டிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளேன். தற்போது, 2030ம் ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்பதில் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.