UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 10:44 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, நள்ளிரவில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் மனிச்சேரியைச்சேர்ந்தவர் அஜய், 31, இவரது நண்பர்கள் தெற்கு பனமன்னாவை சேர்ந்த வைஷாக் 32, கண்ணியம்புரம் பகுதியைச் சேர்ந்த நிதின், சுனங்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்த், தெற்கு பனமன்னா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித்.
இந்நிலையில் இவர்கள் நேற்று அதிகாலை, 2:15 மணியளவில் திருக்கங்கோடு மனிச்சேரி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அஜய் மற்றும் வைஷாக் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நிதின், கோவிந்த், ஸ்ரீஜித் ஆகிய மூவரும் படுகாய மடைந்தனர்.
அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
