UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
காங்கயம்: காங்கயத்தில் குடும்ப பிரச்னையை விசாரிக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், பரஞ்சேர்வழியை சேர்ந்தவர் நித்யா, 19. இவரது கணவர் பிரதாப், 23. கடந்த தீபாவளியன்று மதுபோதையில் மனைவியிடம் கணவர் தகராறு செய்தார். புகாரின் பேரில், காங்கயம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த ரோந்து போலீஸ்காரர் மனோஜ், 38 என்பவர் நேரில் சென்று விசாரித்தார்.
அப்போது, பிரதாப், போலீசாரிடம் தகராறு செய்து, கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கினார். அதில், போலீஸ்காரர் நிலைதடுமாறி டூ–வீலர் மீது விழுந்து தலை, கையில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் பிரதாப்பை, போலீசார் கைது செய்தனர்.
