/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெள்ளாதி குளத்தில் 2 லட்சம் மீன் குஞ்சுகள்
/
பெள்ளாதி குளத்தில் 2 லட்சம் மீன் குஞ்சுகள்
ADDED : அக் 02, 2025 10:51 PM
காரமடை:காரமடை பெள்ளாதி குளத்தில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
கோவை மாவட்டம் காரமடை அருகே சிறுமுகை ரோட்டில் பெள்ளாதி குளம் உள்ளது. இக்குளத்தில் மீனவர்கள் மீன்களை பிடித்து விற்பனை செய்து, வருவாய் ஈட்டி வருகின்றனர். மீனவர்களின் நலன் கருதி, இக்குளத்தில் மேட்டுப்பாளையம் வட்ட மீனவ கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் ரோகு, கட்லா, மெருகால் உள்ளிட்ட 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இந்த மீன் குஞ்சுகள் அடுத்த 7 மாதங்கள் வளர்ந்து விற்பனைக்கு தயாராகிவிடும். இந்த நிகழ்வில் காரமடை நகர மீனவர் அணி தலைவர் சண்முகம், துணை தலைவர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் பழனிசாமி, நிர்வாகிகள் தேவராஜ், மூர்த்தி, நாகராஜ் மகளிர் அணியினர், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.--