/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காதியில் சிறப்பு விற்பனை துவக்கம்
/
காதியில் சிறப்பு விற்பனை துவக்கம்
ADDED : அக் 02, 2025 10:50 PM
கோவை:கோவை, உப்பிலிபாளையம் அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள காதிகிராப்ட் பிரதான விற்பனையகத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது.
கலெக்டர் பவன்குமார் பங்கேற்று, காந்தி உருவப்படத்தை திறந்து வைத்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். சிறப்பு விற்பனையைத் துவக்கி வைத்த அவர், காந்தி கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்டார். காதி கிராப்ட்களில் கதர் மற்றும் கிராமப்புற மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கதர் பட்டு, பாலியஸ்டர், சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, சந்தன மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன.
தீபாவளியை முன்னிட்டு, அனைத்து கதர் விற்பனை நிலையங்களிலும் கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 10 தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் கடனுக்கு விற்கப்படுகிறது. பல்வேறு அரசு அலுவலகங்களிலும் கூடுதலாக கதர் விற்பனை நிலையங்கள் அமைத்து சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.
துவக்க விழா நிகழ்வில், விற்பனை மைய மேலாளர் பொன்னுராஜ், பொறுப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.