தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 2 மனசா திரும்புனாங்க

 2 மனசா திரும்புனாங்க

 2 மனசா திரும்புனாங்க


ADDED : ஆக 21, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்: சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், 2004 -- 2007ம் ஆண்டு பி.சி.ஏ., படித்த மாணவர்கள், 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும்சந்தித்து மகிழ்ச்சியும்,நெகிழ்ச்சியும் அடைந்தனர்.

கணினி அறிவியல் துறை இயக்குனர் நவநீதம் பெரியசாமி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முன்னாள் பேராசிரியர்கள் உமாராணி, நர்மதா ராம் ஆகியோரை, மாணவர்கள் கவுரவித்து மகிழ்ந்தனர். கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், நட்பை புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து கல்லுாரி வளாகத்துக்கு சென்ற மாணவர்கள், தங்கள் வகுப்பறைக்கு சென்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கல்லுாரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் ஐயப்பதாஸ் ஆகியோரை கவுரவித்து வாழ்த்து பெற்றனர். நீங்காத நினைவுகளுடன் இரண்டு மனமாக, மீண்டும் ஒரு சந்திப்புக்கான நேரத்தை எதிர்நோக்கி கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us