ADDED : ஆக 21, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 22 ஊராட்சிகள் உள்ளன. அன்னுார் -- கோவை சாலையில், ஒன்றிய அலுவலகம் உள்ளது. ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு, 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும், ஒன்றிய குழு கூட்டம், ஊராட்சி செயலர்கள் கூட்டம், முன்னோடி வங்கியாளர்கள் கூட்டம் உட்பட பல்வேறு கூட்டங்கள் நடத்த போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட, அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது. பணி உத்தரவு வழங்கப்பட்டது. எனினும் சில மாதங்கள் பணி மிக மெதுவாக நடந்து வந்த நிலையில், இரு வாரங்களாக முழுவீச்சில் நடந்து வருகிறது. தரைத்தளம் மற்றும் முதல் தளம் அமைய உள்ளது.
