/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து இழப்பீடு வழக்கு விசாரிக்க 2 சிறப்பு கோர்ட்; காணொலியில் திறக்கப்பட்டது
/
விபத்து இழப்பீடு வழக்கு விசாரிக்க 2 சிறப்பு கோர்ட்; காணொலியில் திறக்கப்பட்டது
விபத்து இழப்பீடு வழக்கு விசாரிக்க 2 சிறப்பு கோர்ட்; காணொலியில் திறக்கப்பட்டது
விபத்து இழப்பீடு வழக்கு விசாரிக்க 2 சிறப்பு கோர்ட்; காணொலியில் திறக்கப்பட்டது
ADDED : ஜூலை 31, 2025 10:04 PM
கோவை; விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, கோவையில் இரண்டு சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரும் வழக்குகள், கோவை சிறப்பு நீதிமன்றம் (எம்.சி.ஓ.பி.,) மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி சார்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகிறது. விபத்து இறப்பு வழக்கு, கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், விபத்து இழப்பீடு தொடர்பாக , 6,200 க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டில் மட்டும்,4,100 வழக்கு நிலுவையில் இருக்கிறது.வழக்குகள் தேக்கம் குறைக்க, கோவையில், கூடுதலாக சிறப்பு நீதிமன்றம் திறக்க ஐகோர்ட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, மாவட்ட நீதிபதி நிலையில், இரண்டு எம்.சி.ஓ.பி., சிறப்பு நீதிமன்றம் திறக்க ஐகோர்ட் அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதலாவது சிறப்பு கோர்ட், சார்பு நீதிமன்ற கட்டடத்திலும், இரண்டவாது சிறப்பு கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட் கட்டடத்தின் இரண்டாவது மாடியிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவஸ்தவா காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இரண்டு சிறப்பு கோர்ட்டிற்கும், தலா 1,200 வழக்குகள் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதலாவது சிறப்பு கோர்ட்டிற்கு, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி நாராயணன், இரண்டாவது சிறப்பு கோா்ட்டிற்கு, மகளிர் கோர்ட் நீதிபதி சுந்தர்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.