/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்தில் பைக் மோதி 2 தொழிலாளி பலி
/
மரத்தில் பைக் மோதி 2 தொழிலாளி பலி
ADDED : ஆக 05, 2025 11:21 PM
கருமத்தம்பட்டி; கோவை அடுத்த, வடவள்ளி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் வல்லரசு, 25. கட்டட தொழிலாளி. இவர், சக தொழிலாளியான திருவண்ணாமலை மாவட்டம், வீரலூரை சேர்ந்த அனந்து, 25 என்பவருடன் பைக்கில், வாகராயம்பாளையம் - அன்னுார் ரோட்டில், பொன்னே கவுண்டன்புதுாருக்கு சென்றார்.
அனந்து பைக்கை ஓட்டினார். எம்.ராயர்பாளையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, வல்லரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். அனந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.