/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டிக்கு கூடுதலாக 20 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
ஊட்டிக்கு கூடுதலாக 20 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : மே 28, 2025 11:45 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டிக்கு வரும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் 20 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
கோடை காலத்தையொட்டி ஊட்டிக்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஊட்டியை சுற்றி பார்க்க கார்கள் மட்டுமில்லாமல் பஸ்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர். இதனால் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டிக்கு கூடுதலாக 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளை அதிகாரி ஒருவர் கூறுகையில், வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 20 சிறப்பு பஸ்கள் கூடுதலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும். பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் தேவைப்பட்டால், இயக்கப்படும், என்றார்.---