தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 20 மொபைல் போன்கள் மாயம்

 20 மொபைல் போன்கள் மாயம்

 20 மொபைல் போன்கள் மாயம்


ADDED : மார் 04, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை தேரோட்டத்தின் போது, 20 மொபைல் போன்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

காரமடையில் நேற்று முன்தினம் அரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

இவர்களின் பாதுகாப்புக்காக, ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, திருடர்கள் நடமாட்டம், கண்காணிக்கப்பட்டது.

தேரோட்டத்தின் போது, சுமார் 20 பேரின் மொபைல் போன்கள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசல் காரணமாக, மொபைல் போன்கள் காணாமல் போனதா அல்லது திருடர்களின் கைவரிசையா என, கண்காணிப்பு கேமரா வாயிலாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us