/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20 கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை
/
20 கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை
ADDED : ஏப் 03, 2025 05:37 AM
கோவை; மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா என, கோவை மாவட்டத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 20 கடைகளில் மட்டும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டது.
கோவை மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படுகின்றன. அரசு நிர்ணயித்துள்ள தொகையை காட்டிலும் பாட்டிலுக்கு, 10 ரூபாய் வீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது; சில கடைகளில், 20 ரூபாய் வரை வசூலிப்பதால், மதுபானம் வாங்குவோர் அதிருப்தி அடைகின்றனர்.
இச்சூழலில், நாமக்கல் மாவட்ட 'டாஸ்மாக்' மேலாளர் கனகமாணிக்கம் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் ஆய்வுக்கு வந்தனர்.
மாவட்டம் முழுவதும், 50 கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், 20 கடைகளில் மட்டும் கூடுதல் விலைக்கு, மதுபானங்கள் விற்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.
அக்கடை ஊழியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். அதே கடைகளில், சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் (பார்) செயல்பட்டு வருகின்றன.
அவற்றை அதிகாரிகள் நேரில் பார்த்தபோதிலும், அதுதொடர்பாக, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

