/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : மார் 17, 2024 01:16 AM
கோவை:கோவை, கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருணை மகாராஜன்,37. இவரது மனைவி பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த போது, 16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, 2022, செப்., 10ல், கருணை மகாராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
விசாரித்த நீதிபதி குலசேகரன், கருணை மகாராஜனுக்கு, 20 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.