/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேஸ்திரிக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ வழக்கில் தீர்ப்பு
/
மேஸ்திரிக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ வழக்கில் தீர்ப்பு
மேஸ்திரிக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ வழக்கில் தீர்ப்பு
மேஸ்திரிக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ வழக்கில் தீர்ப்பு
ADDED : ஜன 24, 2025 12:19 AM

கோவை; போக்சோ வழக்கில் கட்டட மேஸ்திரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், தொரப்பாடி, விருப்பாச்சிபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல்,33; கட்டட மேஸ்திரியான இவர், 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி வந்தார். சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த அவர், கோவை கே.ஜி.சாவடி பகுதியில் அறை எடுத்து தங்கி பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த சிறுமியை மதுபோதையில் தாக்கினார்.
கே.ஜி.சாவடி போலீசில் சிறுமி புகார் அளித்ததை தொடர்ந்து, கடந்த 2020, அக்.,10ல் வெற்றிவேலை கைது செய்து சிறையிலடைத்தனர். அவர் மீது கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட வெற்றிவேலுவுக்கு, 20 ஆண்டு சிறை, 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

