sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மாநகரில் குப்பை அள்ள... 200 மின்சார வாகனங்கள் அரசு ரூ.26 கோடி நிதி ஒதுக்கியது

/

கோவை மாநகரில் குப்பை அள்ள... 200 மின்சார வாகனங்கள் அரசு ரூ.26 கோடி நிதி ஒதுக்கியது

கோவை மாநகரில் குப்பை அள்ள... 200 மின்சார வாகனங்கள் அரசு ரூ.26 கோடி நிதி ஒதுக்கியது

கோவை மாநகரில் குப்பை அள்ள... 200 மின்சார வாகனங்கள் அரசு ரூ.26 கோடி நிதி ஒதுக்கியது


UPDATED : பிப் 03, 2026 05:09 AM

ADDED : பிப் 03, 2026 05:03 AM

Google News

UPDATED : பிப் 03, 2026 05:09 AM ADDED : பிப் 03, 2026 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : குப்பை சேகரிக்க, 200 மின்சார வாகனங்கள் ரூ.25.75 கோடியில் கொள்முதல் செய்ய தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

கோவையில் குப்பை அள்ளும் பணி செய்யும் தனியார் நிறுவனத்திடம் போதிய வாகன வசதி இல்லை. மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் வாடகை அடிப்படையில், அந்நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. வாகனங்கள் பழுதானால் சீரமைக்க தாமதமாகிறது. அச்சமயங்களில் வீதிகளில் குப்பை தேங்குகிறது. மாற்று வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

துாய்மை பாரதம் திட்டத்தில் மத்திய அரசு நிதி அளித்து வருகிறது. மத்திய அரசு தரும் மானியத்தில், திடக்கழிவு மேலாண்மை நிதியை பயன்படுத்தி, 200 மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்ய மாநகராட்சி திட்டமிட்டது.

மண்டலம் வாரியாக எத்தனை வாகனங்கள் தேவைப்படும் என பட்டியலிட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பியது.

நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலக பொறியியல் பிரிவினர் ஆய்வு செய்து, நிர்வாக அனுமதி தந்திருக்கின்றனர். அதில், ஒப்பந்த விதிமுறைக்கு உட்பட்டு டெண்டர் கோர வேண்டும்; எக்காரணம் கொண்டும் அதிகமான விலைக்கு கொள்முதல் செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், மத்திய மண்டலம் - 65, கிழக்கு - 36, வடக்கு - 35, தெற்கு, மேற்கு - தலா 32 வீதம் 200 மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக, 25.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.






      Dinamalar
      Follow us