தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'தினமும் இரு புதிய விஷயம் கற்றுக்கொள்ளுங்கள்'

 'தினமும் இரு புதிய விஷயம் கற்றுக்கொள்ளுங்கள்'

 'தினமும் இரு புதிய விஷயம் கற்றுக்கொள்ளுங்கள்'


ADDED : பிப் 03, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி: பாரதியார் பல்கலையின், தமிழ்த்துறை சார்பில், முனைவர் சம்பத் குமார், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை சொற்பொழிவு நேற்று, தமிழ் துறை பாரதி அரங்கத்தில் நடந்தது.

தமிழ் துறை தலைவர் தங்கமணி வரவேற்புரையாற்றினார். பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்தார். பேராசிரியர் சங்கமித்ரா, கவிஞர் கவிதாசன், பேராசிரியர் சம்பத்குமார் ஆகியோர் , தமிழின் சிறப்பு மற்றும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினர். பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கவிஞர் கவிதாசன் பேசுகையில், பெற்றோர்கள், நம்மை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்தார்கள். ஆசிரியர்கள், நமக்கு உலகை அறிமுகம் செய்தார்கள். செடி, தினமும் இரண்டு இலைகளை விட்டு, பெரிய மரமாக மாறும். அதுபோல, தினமும் இரண்டு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு புத்தகத்தையாவது படிக்க வேண்டும்,என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us