/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
200 போதை மாத்திரைகள் பறிமுதல்; மூவருக்கு சிறை
/
200 போதை மாத்திரைகள் பறிமுதல்; மூவருக்கு சிறை
ADDED : ஜன 22, 2026 05:14 AM

கருமத்தம்பட்டி: கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்ற, மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலம்பூர் எஸ்.ஐ., மாதவன் மற்றும் போலீசார் அன்னூர் - தென்னம் பாளையம் ரோட்டில் ரோந்து சென்றனர். அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில், பையுடன் சென்ற மூவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அவர்கள், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்த ஹரி, 23, கணேச புரத்தை சேர்ந்த அறிவழகன், 24, உடுமலை அடுத்த முக்கோணத்தை சேர்ந்த விஷ்ணு, 24 என்பது தெரிந்தது. அவர்களின் பையை சோதனை செய்ததில், 1 கிலோ, 100 கிராம் கஞ்சாவும், 200 போதை மாத்திரைகளும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

