/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் இருதய ஆய்வுக்கு நவீன லேப்
/
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் இருதய ஆய்வுக்கு நவீன லேப்
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் இருதய ஆய்வுக்கு நவீன லேப்
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் இருதய ஆய்வுக்கு நவீன லேப்
ADDED : ஜன 22, 2026 05:14 AM

கோவை: பி.எஸ்.ஜி. மருத்துவமனையில், நவீன இரு தயவியல் கத்தீட்டரைசேஷன் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. பி.எஸ்.ஜி., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆய்வகத்தை திறந்துவைத்தார்.
இருதயவியல் துறைத்தலைவர் தமிழரசு கூறுகையில், ''இத்துறையில் இதுவரை 2 டைமன்ஷனில் மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது 3 டைமன்ஷனில் துல்லியமாக பரிசோதனைகள் செய்யலாம். ஸ்டென்ட் சார்ந்த பரிசோதனைகளைமேலும் எளிமையாக்குவதுடன், பாதுகாப்பையும் அதிகரிக்கிறது.
உடல் எடைக்கு ஏற்ப கதிர்வீச்சும் அளவாகவே வெளியிடப்படும். உயர் தொழில்நுட்ப ஆன்ஜியோகிராபி அமைப்புகள் மற்றும் மேம்பட்ட இன்டர்வென்ஷனல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதால், சிக்கலான இதய நோய்களுக்கும் துல்லியமான, பாதுகாப்பான சிகிச்சை வழங்க முடியும்,'' என்றார்.
இருதயவியல் துறை டாக்டர்கள் ராஜேந்திரன், ராமசாமி, வித்யாகர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

