/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
200 திட்டங்கள் அறிவிப்பு; எத்தனை நிறைவேற்றப்படும்?
/
200 திட்டங்கள் அறிவிப்பு; எத்தனை நிறைவேற்றப்படும்?
200 திட்டங்கள் அறிவிப்பு; எத்தனை நிறைவேற்றப்படும்?
200 திட்டங்கள் அறிவிப்பு; எத்தனை நிறைவேற்றப்படும்?
ADDED : மார் 29, 2025 05:46 AM
கோவை மாநகராட்சியில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விப்பிரிவு, பொது சுகாதாரம், பொறியியல் பிரிவு, பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர், நகரமைப்பு பிரிவு என பல தலைப்புகளின் கீழ், 200 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இவற்றை, 50 நிமிடத்தில், மேயர் ரங்கநாயகி, பட்ஜெட் மீதான உரையில் வாசித்தார். இவற்றில் எத்தனை திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்பதை, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
திட்டங்களில் சில...
n மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் மேம்படுத்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு.
n பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அவரவர் வகுப்பறையில் இருந்தவாறு, தலைமை ஆசிரியர் அறையில் இருந்து அறிவிப்பு வெளியிடும் வசதி ஏற்படுத்தப்படும்.
n பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தரும் ஆசிரியர்களை கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்தல்.
n மாநகராட்சி பள்ளியில் படித்து ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கு, முதலாமாண்டு கல்வி கட்டண மட்டும், ஒரு மாணவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல், மாநகராட்சி நிதியில் இருந்து வழங்கப்படும். இதற்கென, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
n பொதுத்தேர்வில், 100 சதவீதம் மாணவ, மாணவியருக்கும், அத்தேர்ச்சி பெற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
n அறிவியல் கண்காட்சி, கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்க்கும் விதமாகவும் மாநகராட்சி பள்ளிகளுக்கு நாளிதழ்கள் வழங்கப்படும். இதற்கென, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
n விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில், வகுப்பறைகளின் மேற்பகுதியில் கூரையுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
n சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாதிரி மகப்பேறு சிகிச்சை மையம் உருவாக்கப்படும். 'டயாலிசிஸ் சென்டர்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
n நஞ்சப்பா ரோடு மற்றும் கிராஸ்கட் ரோடு சந்திப்பில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரூ.8 கோடியில் 'ஸ்கைவாக்' ஏற்படுத்தப்படும். கே.ஜி., தியேட்டருக்கு எதிரே ரூ.9.5 கோடியில் வாகன நிறுத்துமிடம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடியில் வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும்.
n தனியார் பங்களிப்புடன் வ.உ.சி., பூங்காவில் ரூ.6.50 கோடியில் பறவைகள் பூங்கா உருவாக்கப்படும். சிறு குருவிகள், கிளிகள், மயில்கள், இருவாச்சி பறவைகள், வெளிநாட்டு வாழ் பறவைகள், அரிய வகை புறாக்கள், நெருப்புக்கோழிகள், அரிய வகை ஆமைகள், ஈமுக்கோழிகள் போன்ற பறவைகள் இடம் பெறும் வகையில் அமைக்கப்படும்.
n கோவைப்புதுார் சரஸ்வதி நகரில் ஸ்கேட்டிங் மைதானம் ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்படும்.