/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2023ம் ஆண்டு எம்.பில்., சேர்ந்த மாணவர்கள்: குழப்பத்துக்கு முடிவு அறிவிக்க எதிர்பார்ப்பு
/
2023ம் ஆண்டு எம்.பில்., சேர்ந்த மாணவர்கள்: குழப்பத்துக்கு முடிவு அறிவிக்க எதிர்பார்ப்பு
2023ம் ஆண்டு எம்.பில்., சேர்ந்த மாணவர்கள்: குழப்பத்துக்கு முடிவு அறிவிக்க எதிர்பார்ப்பு
2023ம் ஆண்டு எம்.பில்., சேர்ந்த மாணவர்கள்: குழப்பத்துக்கு முடிவு அறிவிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 25, 2024 06:30 AM
கோவை : பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) எம்.பில்., படிப்புக்கான சேர்க்கையை உடனடியாக நிறுத்த அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பாரதியார் பல்கலையில் 2023-24ம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, சரியான வழிகாட்டுதல்கள், தீர்வை உடனடியாக அறிவிக்கவேண்டியது அவசியம்.
பி.எச்டி., தரநிர்ணயம் மற்றும் விதிமுறைகள் 2022 நவ., அறிவிப்பின் படி, எம்.பில்., படிப்புகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சில பல்கலைகள் சிறப்பு அனுமதி பெற்று சேர்க்கை நடத்தின.
இந்நிலையில், 2023 டிச., 26ம் தேதி, எம்.பில்., படிப்புக்கு பல்கலை, கல்லுாரிகள் 2023-24ம் ஆண்டுக்கான சேர்க்கை செயல்பாடுகளை நிறுத்த அறிவிப்பு வெளியானது.
மேலும், பல்கலை மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின் பெறப்படும், எம்.பில்., பட்டம், அங்கீகாரம் இல்லாததாக கருதப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.
பாரதியார் பல்கலை உட்பட, சில மாநில பல்கலைகளில் கடந்த நவ., மாதமே 2023-24ம் ஆண்டுக்கான எம்.பில்., சேர்க்கை முடிக்கப்பட்டு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
மாநில கல்விக்கொள்கையின் கீழ் எம்.பில்., படிப்பு சார்ந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.ஜி.சி., அறிவிப்பை வெளியிட்டு, ஒரு மாத காலம் கடந்த நிலையில், பல்கலை நிர்வாகம், உயர்கல்வித்துறை செயலர் தரப்பில், எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது.
பாரதியார் பல்கலையை பொறுத்தவரையில், எம்.பில்., பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில் 10 பிரிவுகளில் 23 மாணவர்களும், பல்கலை நேரடி துறைகளில் 39 துறைகளில் 46 மாணவர்களும் சேர்க்கை புரிந்துள்ளனர். இம்மாணவர்கள் மத்தியில், எம்.பில்., படிப்பு செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.