/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2,041 கல்வி நிறுவனங்களில் புகையிலை கிடையாது
/
2,041 கல்வி நிறுவனங்களில் புகையிலை கிடையாது
ADDED : ஆக 10, 2025 10:50 PM
கோவை, ; மாநில அளவில், 48,068 கல்வி நிறுவனங்கள் புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களாக, புகையிலை ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள் புகையிலை உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு, அதிகளவில் அடிமைகளாகி வருகின்றனர்.
இதனை தடுக்க, அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பள்ளி, கல்லுாரி அருகில், 100 மீட்டர் தொலைவில், புகையிலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தடை முன்பே உள்ளன. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உறுதி மொழி எடுத்தல், பள்ளி, கல்லுாரி அருகில் போதைப்பொருள் விற்பனை இல்லாமல் தொடர் கண்காணிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படுகிறது.
2024-25ம் ஆண்டில், மாநில அளவில், 48,068 கல்விநிறுவனங்கள் புகையிலை இல்லாத கல்விநிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை இதில், இரண்டாம் இடத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட புகையிலை ஒழிப்பு கட்டுப்பாடு அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கோவையில், 1,836 பள்ளிகள், 205 கல்லுாரிகள் என, 2,041 கல்வி நிறுவனங்கள் புகையிலை இல்லாத கல்விநிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தவிர, கோவையில், 47 கிராமங்கள் புகையிலை இல்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.