/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20வது தமிழ்நாடு ஐ.எம்., செஸ்; இந்திய வீரர் வெற்றி
/
20வது தமிழ்நாடு ஐ.எம்., செஸ்; இந்திய வீரர் வெற்றி
ADDED : மார் 04, 2024 12:39 AM
கோவை:தமிழ்நாடு ஐ.எம்., 20ம் குளோஸ்டு சர்க்யூட் சுழல் முறை செஸ் போட்டியில், இந்திய வீரர் முதலிடத்தை பிடித்தார்.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 50 ஐ.எம்., நார்ம் குளோஸ்டு சர்க்யூட் (நெறிமுறை சுழற்முறை) போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன், 20வது ஐ.எம்., போட்டி, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில், கோவை அலங்கார் ஓட்டலில், பிப்.,27ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது.
இதில், நம் நாட்டின் அர்ஜூன், ஆகாஷ், சியாம்நிகில், பிரியங்கா, குஷக்ரா, ஜீட் ஜெய்ன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பஸ்காரா செவன், டவுசேன் ஒலிவியர், ரஷ்யாவின் கோசிலாஷ்வில்லி டேவிட் மற்றும் உக்ரைனை சேர்ந்த சிட்னிக்கோவ் ஆன்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஒன்பது சுற்றுகளாக நடந்த போட்டியின் இறுதிச்சுற்று முடிவில், இந்திய வீரர் குஷாகரா 7 புள்ளிகளுடன், முதலிடத்தை தட்டிச்சென்றார்.
தொடர்ந்து, சிட்னிகோவ் ஆன்டன் இரண்டாமிடத்தையும், கோசெலஸ்விலி டேவிட் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணை தலைவர் விஜயராகவன், கோவை மாவட்ட செஸ் சங்க செயலாளர் தனசேகர், தலைமை நடுவர் பீட்டர் ஜோசப், முத்துசாமி, முன்னாள் தேசிய செஸ் வீரர் ஸ்ரீவத்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

