/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு மாதங்களில் 2,153 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; விதிமுறை மீறிய 1,935 கடைகள் மூடல்

ADDED : ஜூன் 07, 2025 01:14 AM
கோவை; கோவையில் கடந்த ஏழு மாதங்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் மேற்கொண்ட ஆய்வுகளில், 2,153 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் இணைந்து கடந்த, நவ., மாதம் முதல் பள்ளி, கல்லுாரி அருகே உள்ள கடைகளில், தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டது.
கடந்த, நவ., மாதம் முதல் பள்ள, கல்லுாரிகள் அருகே, 5,345 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 2,153 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1,935 கடைகள் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதாவிடம் கேட்டபோது, ''மாணவர்கள் மத்தியில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 4ம் தேதி மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் போது, அன்னுார், சூலுார் பகுதிகளில் பதுக்கிவைக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இக்கடைகளுக்கு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து 'சீல்' வைக்கப்பட்டது. குறிப்பாக, ஆனைமலை பகுதியில் ஒரு வீட்டில் இருந்து மட்டும், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.