/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளுக்கு 24 பேட்டரி வாகனங்கள்
/
ஊராட்சிகளுக்கு 24 பேட்டரி வாகனங்கள்
ADDED : ஜூன் 17, 2025 09:28 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு, 24 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம், அசோகபுரம், பன்னிமடை உள்ளிட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வீடு, வீடாக சென்று பொது மக்களிடம் குப்பைகளை சேகரிக்க, 24 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
பேட்டரி வாகனங்களை ஊராட்சிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவை எம்.பி., ராஜ்குமார், பங்கேற்று தூய்மை பணியாளர்களிடம் பேட்டரி வாகனங்களை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கார்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள், துணைத் தலைவர்கள், தி.மு.க., கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.