ADDED : செப் 25, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
கோவை, செப்.26:
சாய்பாபா காலனியில், பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் பால் வாங்கிச் செல்லும் வகையில் ‘மில்க் ஏ.டி.எம்.’ செயல்பட்டு வருகிறது.
ஒன்றரை ஆண்டாக செயல்பட்டு வரும் இந்த இயந்திரத்தில் தினமும் 400 பேர் வரை பால் வாங்குகின்றனர். 250 லிட்டர் விற்கிறது. பண்ணையில் இருந்து நேரடியாக கொண்டு வரப்படும் பால், குளிரூட்டப்பட்ட நிலையில் இயந்திரத்தில் சேமிக்கப்படுகிறது. இதனால் அதிகாலை முதல் இரவு வரை எப்போது வேண்டுமானாலும் மக்கள் பால் வாங்க முடிகிறது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பால் அள்வை அதிகரிக்க இருப்பதாக உரிமையாளர் செந்தில் முருகானந்தம் கூறினார். பண்ணையில் விளையும் இளநீர், பதநீர், கீரை, காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் இதே முறையில் விற்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
