/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'24 மணி நேரமும் விழித்திருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்'
/
'24 மணி நேரமும் விழித்திருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்'
'24 மணி நேரமும் விழித்திருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்'
'24 மணி நேரமும் விழித்திருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்'
ADDED : அக் 15, 2024 11:58 PM
கோவை : வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக, அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில், கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி கலையரங்கத்தில்அவசர கட்டுப்பாட்டு மையம்,24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
தொடர் மழை பெய்தாலும் மக்களுக்கு, எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு தடுக்க, அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
அரசுத்துறை அதிகாரிகள், 24 மணி நேரமும் விழிப்புடன், சுழற்சி முறையில் செயல்பட வேண்டும் மக்களிடமிருந்து வரும் அழைப்புகளை அலட்சியப்படுத்தக்கூடாது.
மருத்துவ முகாம்களுக்கு, ஏற்பாடு செய்வது அவசியம். மின்துறையினர் பாதிப்புகளைஉடனடியாக சரிசெய்து, மின்வினியோகம் தடைபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
திருமண மண்டபங்கள், பள்ளிகள், சத்துணவு கூடங்களை தேர்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்படும் நபர்களை தங்க வைக்க, ஏற்பாடு செய்ய வேண்டும்.
வழங்கல் துறையினர், பொதுவினியோகப்பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
அவசர கால பயன்பாட்டிற்கு தேவைப்படும், மணல் மூட்டைகள் தயார்நிலையில் வைத்திருப்பது அவசியம்.
ஏரி, குளம், குட்டை, அருவி மற்றும் நீர் நிலைப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பட்டுப்போன மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.