/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'2,414 விவசாயிகள் 15ம் தேதிக்குள் பதிவு செய்யணும்'
/
'2,414 விவசாயிகள் 15ம் தேதிக்குள் பதிவு செய்யணும்'
'2,414 விவசாயிகள் 15ம் தேதிக்குள் பதிவு செய்யணும்'
'2,414 விவசாயிகள் 15ம் தேதிக்குள் பதிவு செய்யணும்'
ADDED : ஏப் 04, 2025 11:35 PM
மேட்டுப்பாளையம்; காரமடையில் விடுபட்ட 2,414 விவசாயிகள், தனி அடையாள அட்டை எண் பெற, வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியதாவது:-
விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திடவும் தமிழகத்தில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக காரமடை வட்டார கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் தொகை பெறும் 6,521 விவசாயிகளில் 4,107 பேர் பதிவு செய்துள்ளனர். 2,414 விவசாயிகள் இன்னமும் பதிவு செய்யவில்லை.
வரும் 15ம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.------------------

