/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியில் ரூ.5 கோடியில் 25 அங்கன்வாடி மையங்கள்
/
மாநகராட்சியில் ரூ.5 கோடியில் 25 அங்கன்வாடி மையங்கள்
மாநகராட்சியில் ரூ.5 கோடியில் 25 அங்கன்வாடி மையங்கள்
மாநகராட்சியில் ரூ.5 கோடியில் 25 அங்கன்வாடி மையங்கள்
ADDED : மார் 12, 2024 01:55 AM
கோவை;மாநகராட்சி பகுதியில் புதிதாக, 25 அங்கன்வாடி மையங்கள் கட்டரூ.5 கோடியும், பழுதடைந்தவற்றை பராமரிக்க ரூ.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு, 100 சதவீதம் ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் சத்து மாவு, முட்டை என, பல்வேறு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும், 250க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்டடங்கள், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் சிமென்ட் ஓடுகளை கொண்ட மேற்கூரைகள், பக்கவாட்டு சுவர்கள் மோசமான நிலையில் உள்ளன. பராமரிப்பின்றி இருக்கும் இக்கட்டடங்களால்குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இந்நிலையில், மண்டலத்துக்கு ஐந்து வீதம் புதிதாக, 25 அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு ரூ.5 கோடி மாநகராட்சி கல்வி நிதியில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. மேலும், மண்டலத்துக்கு இரண்டு வீதம், 10 அங்கன்வாடி மையங்களை பராமரிக்க ரூ.25 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதால் குழந்தைகளின் பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அங்கன்வாடி மையங்களை பராமரிக்கவும், புதிதாக கட்டவும் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி.,களிடம், அவர்களது நிதியை பயன்படுத்துமாறு வேண்டிவந்தோம். இந்நிலையில், மாநகராட்சி கல்வி நிதியை பயன்படுத்துவது தொடர்பாக கடந்தாண்டு அரசுக்கு கடிதமும் எழுதப்பட்டது. இதையடுத்து, புதிதாக, 25 கட்டடங்களுடன், பழுதடைந்தவற்றை பராமரிக்கவும் நிதி ஒதுக்கப்படுகிறது' என்றார்.

