/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு 2,500 பனை விதைகள் வழங்கல்
/
விவசாயிகளுக்கு 2,500 பனை விதைகள் வழங்கல்
ADDED : டிச 16, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சுல்தான்பேட்டை வட்டாரத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில் பனை விதைகள் வழங்கப்பட்டன.
சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் பனை விதைகள், நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. தலா 50 பனை விதைகள் என, 50 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இரு விவசாயிகளுக்கு தலா, 25 பனை நாற்றுகள் வழங்கப்பட்டன. ஆதார் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வழங்கி, விதைகளை விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.
வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ், உதவி அலுவலர் தியாகராஜன் ஆகியோர், விதைகளை நடும் முறை, பராமரிக்க வேண்டிய முறைகள் குறித்து விளக்கினர்.

