/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25.47 மெட்ரிக் டன் கொப்பரை ஏலம்
/
25.47 மெட்ரிக் டன் கொப்பரை ஏலம்
ADDED : ஜூலை 28, 2025 09:20 PM
நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 25.47 மெட்ரிக் டன் கொப்பரை ஏலம் விடப்பட்டது.
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். இதில், கடந்த வாரம், 25.475 மெட்ரிக் டன் கொப்பரை, 60 லட்சத்து, 64 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு விற்பனையானது.
முதல் தர கொப்பரை, 240 முதல் 241 ரூபாய் வரைக்கும், இரண்டாம் தர கொப்பரை 185 முதல் 200 ரூபாய் வரைக்கும் விற்பனையானது. இதில், 11 விவசாயிகள் மற்றும் 4 வியாபாரிகள் பயனடைந்தனர். வெளிமார்க்கெட்டில் கொப்பரை தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்தில் கொப்பரைக்கு அதிக விலை கிடைத்துள்ளது.
விற்பனை கூடத்தின் வாயிலாக, விவசாயிகள் கொப்பரை மற்றும் இதர விளை பொருட்களை விற்பனை செய்ய விற்பனை கூட அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.