/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் ஆபிசுக்கு25வது மிரட்டல்
/
கலெக்டர் ஆபிசுக்கு25வது மிரட்டல்
ADDED : ஜன 02, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை கலெக்டர் ஆபிசுக்கு, 25வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இ-மெயில் வாயிலாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. புகாரின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால், குண்டு எதுவும் சிக்கவில்லை. வழக்கம் போல புரளியை கிளப்பியது தெரிய வந்தது.
கலெக்டர் ஆபிசுக்கு, கடந்த ஐந்து மாதங்களில், நேற்றுடன் 25 வது முறையாக இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டும் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

