/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடவள்ளி, துடியலுாரில் மண்டல அலுவலகங்கள் 8 கோடியில் கட்ட மாநகராட்சி முடிவு
/
வடவள்ளி, துடியலுாரில் மண்டல அலுவலகங்கள் 8 கோடியில் கட்ட மாநகராட்சி முடிவு
வடவள்ளி, துடியலுாரில் மண்டல அலுவலகங்கள் 8 கோடியில் கட்ட மாநகராட்சி முடிவு
வடவள்ளி, துடியலுாரில் மண்டல அலுவலகங்கள் 8 கோடியில் கட்ட மாநகராட்சி முடிவு
ADDED : ஜன 02, 2026 05:03 AM
கோவை: கோவை மாநகராட்சியோடு 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைய இருப்பதால், வடவள்ளி மற்றும் துடியலுாரில் ரூ.7.82 கோடியில் இரண்டு மண்டல அலுவலகங்கள் கட்டுவதற்கு திட்டமிட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்படுகிறது.
கோவை மாநகராட்சி, 257.04 சதுர கி.மீ. பரப்பளவில், 100 வார்டுகளுடன் அமைந்திருக்கிறது. கடைசியாக, 2011ல் இதன் எல்லை விஸ்தரிக்கப்பட்டது. அப்போது, மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி என 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன.
இப்போது, மாநகராட்சியை ஒட்டியுள்ள 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க திட்டமிட்டு, எல்லையை விஸ்தரித்து, கடந்தாண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலுார் பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, சி ன்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சிகள் இணைக்க பூர்வாங்க வேலைகள் நடந்தன.
ஊராட்சி பகுதிகளை இணைக்கஎதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு, கறுப்புக்கொடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மக்கள் போராடியதால் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், சட்டசபை தேர்தலுக்கு பின், 2026ல் இந்த உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
துடியலுார் வடபுறமுள்ள அசோகபுரம், கீரணத்தத்தை இணைக்கும்போது, அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி சேவை பெற பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு வர வேண்டுமெனில், 12 முதல் 14 கி.மீ. வரை பயணிக்க வேண்டும். தேவையற்ற கால விரையம் மற்றும் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்க, துடியலுாரில் சரவணம்பட்டி ரோட்டில் மண்டல நிர்வாக அலுவலகம் பிளாக் - 1, 2 கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சோமையம்பாளையம் மற்றும் வேடபட்டியை சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல அலுவலகத்துக்கு வர சிரமப்படுவர் என்பதால், வடவள்ளியில் தொண்டாமுத்துார் ரோட்டில் வேம்பு அவென்யூ பகுதியில் மண்டல நிர்வாக அலுவலகம் பிளாக் - 1, 2 கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7.82 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.

