/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'யுவா கபடி' போட்டி தொடரில் 27 அணிகள் வெளிமாநில வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டம்
/
'யுவா கபடி' போட்டி தொடரில் 27 அணிகள் வெளிமாநில வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டம்
'யுவா கபடி' போட்டி தொடரில் 27 அணிகள் வெளிமாநில வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டம்
'யுவா கபடி' போட்டி தொடரில் 27 அணிகள் வெளிமாநில வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டம்
ADDED : டிச 15, 2024 11:57 PM

கோவை; தேசிய அளவிலான யுவா கபடி போட்டியில், 27 அணி வீரர்கள் 'லீக்' சுற்றில் அபராமான ஆட்டத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர்.
தேசிய அளவிலான 'யுவா கபடி' தொடர், 11வது பதிப்பு, கோவை கற்பகம் இன்ஜி., கல்லுாரியில் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. அடுத்த மாதம், 10ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என, 23 மாநிலங்களை சேர்ந்த, 27 அணிகள் பங்கேற்றுள்ளன.
'லீக்' முறையில் நடந்துவரும் மூன்றாவது டிவிஷன் போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை, வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் நாளில், டேரடூன் டைனமோஸ் அணி, கோனர் கிங்ஸ் அணியும் மோதின. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரடூன் டைனமோஸ் அணி, 44-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து, டாடோபா டைகர்ஸ் அணி, 47-20 என்ற புள்ளி கணக்கில் ராஞ்சி ரேஞ்சர்ஸ் அணியையும், சாம்பால் சேலஞ்சர்ஸ் அணி, 37-32 என்ற புள்ளி கணக்கில் இந்துார் இன்விசிபில்ஸ் அணியையும், வாஸ்கோ வைபர்ஸ் அணி, 39-35 என்ற புள்ளி கணக்கில் டாடோபா டைகர்ஸ் அணியையும் வெற்றி கொண்டன.
கோனார்க் கிங்ஸ் அணி, 28-27 என்ற புள்ளி கணக்கில் சாம்பால் சேலஞ்சர்ஸ் அணியையும், ஹிமாலயன் தார்ஸ் அணி, 42-27 என்ற புள்ளி கணக்கில் வாஸ்கோ வைபர்ஸ் அணியையும் வென்றன.
சாம்பால் சேலஞ்சர்ஸ் அணி, லடாக் வால்வ்ஸ் அணி இடையேயான போட்டி, 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.