தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கலைமகள் கல்லுாரியில் 27வது பட்டமளிப்பு விழா

 கலைமகள் கல்லுாரியில் 27வது பட்டமளிப்பு விழா

 கலைமகள் கல்லுாரியில் 27வது பட்டமளிப்பு விழா


ADDED : பிப் 02, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் கோவை மேலாண்மை தொழில்நுட்ப கல்லுாரியில், 27ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அவர் பேசுகையில், ''தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்த வேண்டும். தாம் பெற்ற கல்வியை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.

விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கலைமகள் கல்வி நிறுவனங்களின் செயலர் சின்னராசு, கல்லுாரி கல்விப்புல இயக்குனர் நடராஜன், கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மாலா, மேலாண்மை தொழில் நுட்ப கல்லுாரி முதல்வர் லதா மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us