/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் பிறந்த 28 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
/
அரசு மருத்துவமனையில் பிறந்த 28 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அரசு மருத்துவமனையில் பிறந்த 28 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அரசு மருத்துவமனையில் பிறந்த 28 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ADDED : பிப் 03, 2025 04:52 AM
கோவை, : கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த, 28 குழந்தைகளுக்கு த.வெ.க., கட்சி நிர்வாகிகள் சார்பில், நேற்று ஒரு கிராம் வீதம் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில், அதிகாரப்பூர்வமாக கட்சி துவங்கி ஓராண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில், கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பில், அரசு மருத்துவமனையில் நேற்று பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று ஐந்து குழந்தைகளே பிறந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் பிறந்த குழந்தைகள், 28 பேருக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத்குமார், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.