/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : டிச 31, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., ஆக பணிபுரிபவர் முத்துகுமார். நேற்று முன்தினம் போத்தனூர், ஜம் ஜம் நகர் பகுதியில் ரோந்து சென்றார். அங்குள்ள காலியிடத்தில் கார் ஒன்று (கே எல் 23 இ 0132, டொயோட்டா இன்னோவா) நின்றிருந்தது.
காரில் இருந்தவரிடம் விசாரித்தபோது, அவர் கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஒலவக்கோடு பகுதியை சேர்ந்த முஹமது சபீர், 29 என்பதும், அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 28.75 கி. கிராம் இருப்பதும் தெரிந்தது. புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார், முஹமது சபீரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.