/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அணையில் 28 மி.மீ., மழை பதிவு
/
சிறுவாணி அணையில் 28 மி.மீ., மழை பதிவு
ADDED : நவ 25, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையானது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரமானது, 50 அடி என்ற நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 19 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 28 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. அணையின் நீர்மட்ட மானது, 38.97 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.7 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

