/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடையின்மை சான்று தர மறுப்பு: வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
/
தடையின்மை சான்று தர மறுப்பு: வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
தடையின்மை சான்று தர மறுப்பு: வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
தடையின்மை சான்று தர மறுப்பு: வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : நவ 25, 2025 05:56 AM
கோவை: கடன் தொகை செலுத்திய பிறகும், தடையின்மை சான்று தர மறுத்ததால், இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார்,46. குறுந்தொழில் நிறுவனம் நடத்தி வரும் இவர், ஆர்.எஸ்.புரத்திலுள்ள கனரா வங்கியில் தொழில் அபிவிருத்திக்கு, ரூ.1.3 கோடி கடன் வாங்கினார். கடன் முழுவதும் செலுத்திய பிறகு, வங்கி நிர்வாகத்திடம் தடையின்மை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.
சான்றிதழை தராமல் வங்கி நிர்வாகம் இழுத்தடிப்பு செய்ததால், இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரின் கடன் கணக்கை முடித்து தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.