/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிறைவு பெற்றது 'கோயம்புத்துார் விழா'
/
நிறைவு பெற்றது 'கோயம்புத்துார் விழா'
ADDED : நவ 25, 2025 05:57 AM

கோவை: கோவையில், 10 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்ட கோயம்புத்துார் விழா, 18வது பதிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
கோவை மாநகரின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் விதமாக விழா நடத்தப்பட்டது. பல்வேறு அமைப்புகளும், மக்களும் இணைந்து நடத்திய இவ்விழா, குறித்து, 'கோயம்புத்துார் விழா 2025' தலைவர் சண்முகம் பழனியப்பன் கூறியதாவது:
கோயம்புத்துார் விழா, 18வது பதிப்பு நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்துள்ளது. இந்த ஆண்டு, 150 நிகழ்வுகளுக்கு திட்டமிட்டு, 180 நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம்.
10 மாவட்டங்களில் இருந்து பாரா விளையாட்டு போட்டிகளில், 700க்கு மேற்பட்ட, மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் விளையாடி உள்ளனர்.
முதல் முறையாக, நடத்தப்பட்ட 'ஸ்கை டான்ஸ்' (Sky Dance) மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வேக விழா எனும் தலைப்பில் கோ-கார்ட் பந்தயம், ஆட்டோகிராஸ் சாம்பியன்ஷிப், கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம்.
-ஓவிய வீதி, கோவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா, விழா வீதி, வைப்ஸ் ஆப் செட்டிநாடு உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகள், சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

