/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீடு 280 பேர் பதிவு
/
மருத்துவ காப்பீடு 280 பேர் பதிவு
ADDED : பிப் 23, 2024 12:41 AM
கோவை;பீளமேடு பகுதியில் நேற்று நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமில், 250க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, மாநிலம் முழுவதும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடந்துவருகின்றன. மாநகராட்சி, 26வது வார்டு பீளமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த முகாமை கவுன்சிலர் சித்ரா துவக்கி வைத்தார்.
மதியம், 3:30 மணியளவில், 280 பேர் பதிவு செய்திருந்த நிலையில் முகாமில் பங்கேற்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் வகையில், வார இறுதி நாளில் மீண்டும் சிறப்பு முகாம் நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.