/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
28வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ்; 7 புள்ளிகள் பெற்று தெலுங்கானா வீரர் 'டாப்'

ADDED : செப் 23, 2024 11:26 PM
கோவை : கோவையில் நடந்த, 28வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியில், தெலுங்கானா வீரர் ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பாலா முதலிடம் பிடித்தார்.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 26 முதல், 30வது வரையிலான ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டிகள், அலங்கார் ஓட்டலில் நடக்கிறது.
கடந்த மாதம், 30 முதல் கடந்த, 5ம் தேதி வரை, 26வது போட்டி இடம்பெற்றது.
இதையடுத்து, 27வது போட்டி முடிந்து, 28வது போட்டி கடந்த, 15 முதல், 21ம் தேதி வரை நடந்தது. இதில், பெலாரஸ் நாட்டின் எவ்ஜெனி பொடோல்சென்கோ, ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த வாகிடோவ் டாயிர், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி, ரஷ்யாவின் கோசெலாக்ஷ்வி டேவிட் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
தவிர, இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பாலா(தெலுங்கானா), துருவ் தோட்டா(தெலுங்கானா), தமிழகத்தை சேர்ந்த தினேஷ் ராஜன், ஆகாஷ், தேஜாஸ்வின் என, 10 பேர் பங்கேற்றனர். ஒன்பது சுற்றுக்களின் முடிவில், தெலுங்கானாவை சேர்ந்த ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பாலா, 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து, தெலுங்கானாவை சேர்ந்த துருவ் தோட்டா, 6 புள்ளிகள், தமிழகத்தை சேர்ந்த ஆகாஷ், 6 புள்ளிகள், பெலாரஸ் நாட்டின் எவ்ஜெனி பொடோல்சென்கோ, 5 புள்ளிகள், தமிழகத்தை சேர்ந்த தேஜாஸ்வின், 4.5 புள்ளிகள் என, அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு மாநில சதுரங்க சங்க தலைவர் மாணிக்கம் பரிசுகள் வழங்கினார்.