/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தன மரம் வெட்டி கடத்திய 3 பேர் கைது
/
சந்தன மரம் வெட்டி கடத்திய 3 பேர் கைது
ADDED : அக் 30, 2024 08:45 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற மூன்று பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட கடுக்காய்மரத்திட்டு பகுதியில், வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் தலைமையிலான வனக்குழுவினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அடையாளம் தெரியாத சிலர், வனப்பகுதிக்குள் இருப்பதைக் கண்டுள்ளனர். அவர்களை விசாரிக்க முற்படுகையில், அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து, களப்பணியாளர்கள், அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அண்ணாமலை,56, கணேசன், 39, மற்றும் அசோக், 25, என்பது தெரிந்தது. அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், 22 கிலோ எடை கொண்ட 3 சந்தன மரத்துண்டுகள், ஒரு வெட்டுக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் வனத்தில் அத்துமீறி நுழைந்து, சந்தன மரங்களை திருட்டுத் தனமாக வெட்டி கள்ள மார்க்கெட்டில் விற்பதும் தெரிந்த நிலையில், மூவரும் கைது செய்யப்பட்டனர்.