ADDED : ஜன 30, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் பல்வேறு இடங்களில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனைசெய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதிகளில் மது பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.