/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காருண்யா பல்கலையில் 3 நாள் சர்வதேச மாநாடு
/
காருண்யா பல்கலையில் 3 நாள் சர்வதேச மாநாடு
ADDED : டிச 11, 2025 06:42 AM

கோவை: கோவை காருண்யா பல்கலை மற்றும் கனடா வாட்டர்லுா பல்கலை சார்பில், நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மாநாடு நடக்கிறது.
நேற்று துவங்கிய இந்த மூன்று நாள் மாநாட்டில், நெதர்லாந்து டெல்ட் தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் ஆர்னால்ட் ஹீமிங்க் தலைமை வகித்தார். மாநாட்டின் தலைவர் மற்றும் நீரியல் நிபுணர் பேராசிரியர் ஜேம்ஸ், பனிமலைகள் உருகுதல், வெள்ளம் மற்றும் வறட்சி போன்றவை பற்றி விளக்கினார். பேராசிரியர் சுந்தர்பன்ஸ் மான்குரோவ் வனப்பரப்பளவு குறைதல் குறித்து பேசினார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, கனடாவின் குவெல்ப் பல்கலை பேராசிரியர் டாக்டர் எட்வர்ட் மெக்பீன், இந்தியாவின் மேற்பரப்பு நீரில் '70 சதவீதம் மனிதப் பயன்பாட்டிற்கு தகுதியற்றது எனக் குறிப்பிட்டு, நீர்தன்மையை மேம்படுத்த 'மல்டிலேயர் மண் தீர்வு' முறையை அறிமுகப்படுத்தினார்.
காருண்யா பல்கலை துணைவேந்தர் எலிஜா பிளெசிங், பதிவாளர் விஜய், காருண்யா அறக்கட்டளை தலைமை செயலாளர் மற்றும் முன்னாள் துணைவேந்தர் பிரின்ஸ் அருண்ராஜ், வாட்டர்லுா பல்கலை பேராசிரியர் குமாரசாமி பொன்னம்பலம், ஆஸ்திரேலியா மாட் மேக் டொனால்ட் நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் ராய் உன்னி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

