/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீன எமர்ஜென்சி சிகிச்சை பிரிவு ஸ்ரீ ராமகிருஷ்ணாவில் துவக்கம்
/
நவீன எமர்ஜென்சி சிகிச்சை பிரிவு ஸ்ரீ ராமகிருஷ்ணாவில் துவக்கம்
நவீன எமர்ஜென்சி சிகிச்சை பிரிவு ஸ்ரீ ராமகிருஷ்ணாவில் துவக்கம்
நவீன எமர்ஜென்சி சிகிச்சை பிரிவு ஸ்ரீ ராமகிருஷ்ணாவில் துவக்கம்
ADDED : டிச 11, 2025 06:42 AM

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டது.
புதிய பிரிவை,எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் திறந்துவைத்தார். இப்பிரிவில், 24 மணி நேர சேவை வழங்கப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், சிறப்பு சிகிச்சை பெற்ற 40 அவசர சிகிச்சை பிரிவு செவிலியர் உட்பட ஒருங்கிணைந்த பல்துறை அவசர சிகிச்சை குழுவால் இயக்கப்படுகிறது.
இங்கு, பக்கவாதம், மாரடைப்பு மற்றும் 'பாலிட்ராமா' எனும் பல்வேறு பிரச்னைகளுடன் அட்மிட் செய்யப்படும் நோயாளிகளுக்கு கூட, சர்வதேச தரத்தில் துல்லிய சிகிச்சை அளிக்க இயலும். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் கூறுகையில், ''அவசர சிகிச்சைக்காக, ஒருங்கிணைந்த அதிநவீன வசதிகளுடன் புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளியை அழைத்து வரும் போதே, பாதிப்பின் தன்மை அறிந்து நிலையை சீராக்கும், பிரத்யேக மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி ராம் குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

