/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீட்கப்பட்ட இடத்தில் கம்பி வேலி அமைப்பு
/
மீட்கப்பட்ட இடத்தில் கம்பி வேலி அமைப்பு
ADDED : டிச 11, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உக்கடம்: உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயிலின் உப கோயிலாக உள்ள, வரசித்தி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான, 79 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. கடைகள், வீடுகள் என 16 கட்டடங்கள் இருந்தன.
இதுதொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடியானதால், நோட்டீஸ் வழங்கப்பட்டு, வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். கடைகளும் காலி செய்யப்பட்டதும் பொக்லைன் இயந்திரங்களால் இடித்து, தரைமட்டம் ஆக்கப்பட்டன. ரூ.100 கோடி மதிப்புள்ள இவ்விடம், மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக இரவோடு இரவாக, கம்பி வேலி போடப்பட்டு, பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

