/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் நடந்த மனித உரிமை பேரணி
/
காரமடையில் நடந்த மனித உரிமை பேரணி
ADDED : டிச 11, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரமடை: மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடைப்பயணம் பேரணி காரமடையில் நடைபெற்றது.
காரமடை கார் ஸ்டாண்டில் இருந்து நகராட்சி வரை, மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடைப்பயணம் பேரணி நடைபெற்றது.
தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு, தேசிய தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில தலைவர் அந்தோணி ராஜ் முன்னிலை விதித்தார்.
பேரணியின் போது, மனித உரிமைகளை அனைத்து பிரிவு மக்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும், குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று கருதப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

