/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் ஊழியர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை
/
பெண் ஊழியர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை
ADDED : டிச 11, 2025 06:41 AM
காரமடை: காரமடை நகராட்சியில், பெண் ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை ரோட்டரி சார்பில், காரமடை நகராட்சியில் நேற்று அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு, இலவசமாக கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் தொடர்பான பரிசோதனை நடைபெற்றது.
இதற்காக அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட சிறப்பு பஸ் கொண்டு வரப்பட்டது. காரமடை நகராட்சி கமிஷனர் மதுமதி, தலைவர் உஷா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாட்டினை, காரமடை ரோட்டரி தலைவர் குமணன் நடராஜன், நகராட்சி கவுன்சிலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். 40 பேர் இதில் கலந்து கொண்டனர்.

